லண்டனில் எடுக்கப்பட்ட நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பிஸி நடிகை
பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதனைதொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்திருந்த அவர், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

போட்டோஸ் வைரல்
அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை மாளவிகா மோகனன், தற்போது லண்டனுக்கு சுற்றுலா சென்ற இடத்திலும் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பதிவேற்றியுள்ளார். மாளவிகா மோகனனின் சமீபத்திய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.















































