நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் சென்று நடிகர் கமல்ஹாசனிடம் ஆசிப்பெற்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திறமையான நடிகர்
ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதைதொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர் காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி, வேலைக்காரன், விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, தி லெஜண்ட், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திடீர் சந்திப்பு
சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இவரை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கமல்ஹாசன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.