பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் நடிகை சுசித்ரா நிஜ வாழ்க்கையில் லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டியுள்ளார்.

வரவேற்பு பெற்ற தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இது பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்து கொண்டு உலக அறிவே இல்லாத பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார் பாக்கியா. அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தை தனி ஆளாக நின்று காப்பாற்றியும் வருகிறார். பல நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதால் பாக்கியலட்சுமி தொடர் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யவாக நடிக்கும் நடிகை சுசித்ரா, மிகவும் பொருத்தமாக அருமையாக நடித்து வருகிறார். 

கெத்து

சுசித்ரா தான் புதியதாக வாங்கியுள்ள லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் பக்கத்தில நின்ற படியும், காரை ஓட்டியப்படியும் புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள். அந்த புகைப்படங்களுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “உங்களுடன் கைகோர்க்கும் தருணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனின் கையை தொட்டால் போதும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சொந்தக்காலில் நின்று சாதிப்பதைப் போல, பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா நிஜ வாழ்க்கையில், லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி காருடன் புகைப்படங்களை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here