விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் தனக்கான வேடம் குறித்து இயக்குநர் மிஷ்கின் ரசிகர்களிடம் தெரிவித்திருகிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே லியோ படத்தின் மீது உள்ள ஹைப் காரணமாக ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சாதனை

லியோ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. மேலும், இப்படத்தில் விஜய்குரிய காட்சிகள் நிறைவு பெற்றதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தார்.

அப்டேட்

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கினை சந்தித்த ரசிகர்கள், இப்படம் குறித்து அப்டேட் கேட்டனர். அதற்கு மிஷ்கின், “எல்லாரும் விஜய் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள். அவர் மிகவும் இனிமையானவர். ‘லியோ’ படத்தில் நான் ஒரு சிறிய வில்லன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here