‘மாமன்னன்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உணர்வுகளை கடத்தக்கூடியவர் என நடிகர் தனுஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

டெரர் வடிவேலு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். எப்பொழுதும் காமெடியனாகவே பார்த்து பழகிய நடிகர் வடிவேலு, ‘மாமன்னன்’ படத்தில் டெரராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற நாளை (ஜூன் 29) வெளியாக உள்ளது.

பாசிடிவ் விமர்சனம்

இந்த நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்துள்ள நடிகர் தனுஷ், பாசிடிவான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “மாரி செல்வராஜ் உணர்வுகளை கடத்தக்கூடியவர். வடிவேலு மற்றும் உதயநிதி அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர். கீர்த்தி, ஃபகத் ஃபாசில் தங்களது கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இடைவேளை காட்சியில் திரையரங்கே அதிரப்போகிறது. ஏ.ஆர் ரஹ்மானின் இசை அற்புதம்..” 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here