தனக்கு விவாகரத்து கிடைத்ததை பிரபல நடிகை இந்தி நடிகை ராக்கி சாவந்த் குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்ச்சை நடிகை

எப்பொழுதும் தன்னை சுற்றி பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். அடிக்கடி இவரது கவர்ச்சி வீடியோக்களும், மீடியாவுடன் மல்லுக்கட்டும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவிக்கொண்டே இருக்கும். நடிகை ராக்கி சாவந்த், 2019 ஆம் ஆண்டு ரிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

குத்தாட்டம், கொண்டாட்டம்

தனது விவாகரத்துக்கு பிறகு, ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வந்த நடிகை ராக்கி சாவந்த், கடந்த ஆண்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர். பின்னர் ஆதில் கானிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவருக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. தனக்கு விவாகரத்து கிடைத்ததை நடிகை ராக்கி சாவந்த் நண்பர்களுக்கு விருந்து வைத்தும், குத்தாட்டம் போட்டும் கொண்டாடியுள்ளார். அதுதொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here