நாளைய வாக்காளர்களான நீங்கள் ‘காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள்’ என்று நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கல்வி விழா

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றடைந்தார். அவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்திற்கு சென்ற விஜய், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசைகளையும் வழங்கினார்.

வைர நெக்லஸ்

பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் சான்றிதழ் வழங்கி, வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். அதனைதொடர்ந்து மாற்றுத்திறனாளியான மாணவி ஆர்த்திக்கு நடிகர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். மேலும் மாணவி ஆர்த்தியுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைதொடர்ந்து மாணவ – மாணவிகளுக்கு விஜய் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

மாணவர்களுக்கு அறிவுரை

முன்னதாக விழா மேடையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே” எனக்கூறி தனது உரையை தொடங்கினார் நடிகர் விஜய். அப்போது அவர் பேசியதாவது; “மனசுக்கு பொறுப்பு வந்ததாக உணர்கிறேன். உங்களைப் பார்க்கும் போது என் மாணவப்பருவம் நினைவுக்கு வருது. படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது. யாருக்கும் அட்வைஸ் பண்ண விரும்பவில்லை. குணத்தை இழக்கிறீர்கள் என்றால் அனைத்தையும் இழக்கிறீர்கள் என்று அர்த்தம். சிந்தனை திறன் முக்கியம். அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிங்க, தெரிஞ்சுக்கோங்க.

நாளைய வாக்காளர்கள்

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட வேண்டாமென உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். நீங்க தான் நாளைய வாக்காளர்கள், காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள். நல்ல தலைவரை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜாலியாக இருங்கள். நம் வாழ்க்கை நம் கையில் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். சமீபத்தில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்ததது.

காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க…
காசு இருந்தா புடுங்கிக்கிடுவானுங்க…
ஆனா படிப்ப மட்டும் எடுக்கவே முடியாது..!

என்னோட கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு, அதை நோக்கியே பயணம் செல்கிறது”. இவ்வாறு நடிகர் விஜய் மனம் திறந்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here