நடிகர் கார்த்தியின் 27வது படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனம் கவர்ந்த நடிகர்

பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அதைதொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது கார்த்தி ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் கார்த்தியின் 27வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி 27 படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கவுள்ளதாகவும், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி படத்தில் அரவிந்த் சாமி இணைந்தால் இதுவே இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here