ஜெயிலர் படத்தில் ரஜினியின் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ள காரணமாக இயக்குநர் நெல்சன் எக்ஸ்ட்ரா டேட் கேட்டதால் ரஜினி டென்ஷனாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி சரஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. ஆனால் கடைசி நேரத்தில் மீண்டும் ரஜினியின் சில காட்சிகளை படமாக்க உள்ளதாக நெல்சன் கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
டென்ஷனான ரஜினி
சமீபத்தில் ரஜினியின் காட்சிகள் அனைத்தும் சூட்டிங் முடிந்துவிட்டதாகவும், அவர் லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் கூறியிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் எடிட்டிங் அனைத்தும் முடிந்து, டப்பிங் கொடுத்து வருவதாகவும் கூறியிருந்தனர். மேலும், ஒரு பாடலுக்கான ரிகர்சல் செய்த போட்டோவை நடிகை தமன்னா ஷேர் செய்திருந்தார். இதனால் ஜெயிலர் படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருப்பது உறுதியானது. இந்நிலையில் கடைசி நேரத்தில் ரஜினியிடம் நான்கு, ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியுமா? என்று கேட்டுள்ளார் நெல்சன். இதனால் டென்ஷனான ரஜினி வேறு வழியில்லாமல் ஓகே சொன்னதாக தகவல் பரவி வருகின்றது.















































