விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் புதுப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளார்.

கெத்தான நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டு போகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ வீரராகவும் நடித்தால் இவர் உண்மையிலேயே போலீஸ் அதிகாரி, ராணுவ வீரர் என்று நினைத்துக் கொண்ட பல 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிக்கக் கூடியவர். புரட்சி கலைஞர் என்றும் கேப்டன் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். சினிமாவில் கிடைத்த வெற்றியின் காரணமாக நடிகர் விஜயகாந்த், அரசியலிலும் இறங்கினார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது அரசியல் பணிகளை அவரது மனைவியும், மகன்களும் ஏற்று கவனித்து வருகின்றனர்.

நடிப்பில் ஆர்வம்

இந்நிலையில், விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் தற்போது புது படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதற்காக தனது தோற்றத்தை டோட்டலாக மாற்றி கெத்தான லூக்கில் போட்டோ சூட் எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் அடுத்த விஜயகாந்த் தயார் என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல், அப்பாவை போல் சினிமாவில் நல்ல பெயர் எடுங்கள் என்று அட்வைஸூம் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here