ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதை கொண்டாடிய நடிகை கஸ்தூரியின் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
சர்ச்சை நடிகை
90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடிப்பில் அசத்தி வருபவர். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இவரது நடிப்பு பிரம்மாண்டமாக பேசப்பட்டது. அதன்பிறகு இவரது மார்க்கெட் உச்சிக்கே சென்றது. தற்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கஸ்தூரி, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். எந்த வகையான கமெண்ட்களாக இருந்தாலும் அதற்கு அசராமல் பதிலடி கொடுப்பார். இதனால் இவரை சர்ச்சை நடிகை என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து, சந்தோஷத்தில் கஸ்தூரி துள்ளி குதிக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
வெற்றி கோப்பை
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் கடைசி பந்தில் போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
ஆட்டம் போட்ட கஸ்தூரி
அந்த வகையில் நடிகை கஸ்தூரி சிஎஸ்கே அணி விளையாடிய இறுதிப் போட்டியை குடும்பத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும் உற்சாகமாக துள்ளி குதித்து ஆடினார். அந்த வீடியோ தான், தற்போது சமூக வலைதளங்களில் ரெண்டாகியுள்ளது. இதுபோல் பல முன்னணி நட்சத்திரங்களின் வீடியோவும், கிரிக்கெட் ரசிகர்களின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.