எதற்காக சமூக வலைதளங்களில் அமைதியாக இருக்கேன் என நடிகர் விளக்கமாக கூறியுள்ளார்.
விரைவில் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் சித்தார்த். ஆனால் இப்போது சாக்லேட் பாய் என்ற வார்த்தையை சொன்னாலே டென்ஷன் ஆகும் அளவிற்கு மாறிவிட்டார். தற்போது இவரது நடிப்பில் டக்கர் என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில், சித்தார்த், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தில் திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய நடிகர் சித்தார்த் படத்தை பற்றி மட்டும் பேசாமல் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதி காப்பது ஏன் என்ற சஸ்பென்ஸ்சையும் உடைத்துள்ளார்.
ஆர்வமாக இருக்கிறேன்
நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது, “டக்கர் என இந்தப் பட தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக்கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தங்கள் இதற்கு உண்டு. முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்தேன். இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகிவிட்டேன். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் கலந்துகொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை” என்று பேசியுள்ளார்.