நடிகை அனுபமா பரவேஸ்வரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
பிஸியான கியூட் நடிகை
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் “கொடி” படத்தின் மூலம் அறிமுகமானார். கொடி படத்தில் தனுஷ், திரிஷாவுடன் இணைந்து அனுபமா நடித்திருந்தார். மலையாள படத்தில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்த அனுபமாவிற்கு, தெலுங்கிலும் நல்ல கதைகள் அமைந்தது. அதனால் தெலுங்கு துறையிலும் பிஸியாகவே இருந்து வந்தார். ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து ரௌடி பாய்ஸ் என்ற படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். நடிப்பில் பிஸியாக இருந்துவரும் அனுபமா தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.
இன்ஸ்டா பதிவு
சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் அனுபமா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக பதிவிட்டு உள்ளார். பல காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த அனுபமாவின் இந்த பதிவால் அனைத்து காதல் கிசுகிசுகளுக்கும் முடிவு கிடைத்துள்ளது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த அனுப்பமாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.















































