பாடகி ஜொனிதா காந்தி பாடலுடன் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வருகிறது.

பிரபல பின்னணி பாடகி

ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற “மெண்டல் மனதில்” என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜொனிதா காந்தி. அதன்பிறகு காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, சர்க்கார், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து, டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். மிகப்பெரிய ஹிட்டான இந்த பாடலுக்குப் பிறகு டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி, வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு உள்ளிட்ட பாடல்கள் அவர் பாடியுள்ளார். ஜொனிதா காந்தி தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உருது, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பாடி அசத்தியுள்ளார்.

இசை நிகழ்ச்சி

இந்நிலையில், ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் நாளை இரவு 7:30 மணிக்கு நடக்க இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்பாக பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி, பாப் பாடகர் டிவைன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஜொனிதா காந்தி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா ஆகியோர் நடனம் ஆடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here