இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை போலீசாருக்கு ரோந்து ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ்
சட்டம் ஒழுங்கை காப்பதிலும், மக்கள் பாதுகாப்பு இருப்பதற்கும் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான முன்னேற்றங்களை கண்டு வரும் அதேவேளையில், அதனை தவறாக பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற மோசடி குற்றங்களை தடுத்து மக்கள் காப்பதற்கு நவீன யுக்திகளை போலீசார் கையாண்டு வருகின்றனர். ஆங்காங்கே அடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்கானிக்கவும் ஜீப், கார், இருசக்கர வாகனம் என போலீசார் ரோந்து வாகனங்களில் சென்று வருகின்றனர்.
ரோந்து ஆட்டோ
இந்த நிலையில் இந்திய அளவில் முதல் முறையாக, கோவை மாநகரில் போலீசாருக்கு சிவப்பு நிறத்துடன் கூடிய 2 பேட்டரி ரோந்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் எச்சரிக்கை ஒலிபெருக்கி மற்றும் சிவப்பு, நீல விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. ரோந்து பேட்டரி ஆட்டோவில் நான்கு புறமும் போக்குவரத்து போலீசாரின் தொலைபேசி மற்றும் அவசர உதவி எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. மேலும் அந்த ஆட்டோக்களில் பொருட்களை ஏற்றி செல்லும் வசதி உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக கோவை மாநகரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ரோந்து பேட்டரி ஆட்டோ இன்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.