கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜவான் படப்பிடிப்பு

2013 ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. பின்னர் பெரிய இடைவேளைக்குப் பிறகு தெறி படத்தை இயக்கினார். அதன்பிறகு மெர்சல், பிகில் என இவர் இயக்கிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தியில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கும் அட்லீக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலை வருகின்றது. ஜவான் திரைப்படத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். ரூ.200 கோடிக்கு மேல் பட்ஜெட் வைத்து ஜவான் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

விழாவில் பங்கேற்பு

இந்த நிலையில், பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழாவில் தன் மனையுடன் பங்கேற்றுள்ளார் இயக்குநர் அட்லீ. பாலிவுட், ஹாலிவுட் என ஏராளமான சினிமா பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்று அசத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். சிவப்பு கம்பள வரவேற்பில் இவர்கள் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here