தனது அம்மாவை இழந்து தவிக்கும் பவித்ரா லட்சுமி இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

மீள முடியாத சோகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா. அதன் பிறகு ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி வந்த பவித்ரா லட்சுமிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் பவித்ரா. கடந்த வாரம் அவரது அம்மா உயிரிழந்துள்ளார். அம்மாவின் இழப்பில் இருந்து மீள முடியால் இருக்கும் பவித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவினை போட்டுள்ளார்.

உருக்கமான பதிவு

பவித்ரா பதிவிட்டுள்ள பதிவில்,”நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது பாப்பா. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல். நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர் அம்மா, உண்மையில் சூப்பர் வுமன், ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் பேசுவதை, சாப்பிடுவதையும் கடைசியாக ஒருமுறை பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் நீங்கள் என்னை இப்படி விட்டுவிட்டீர்களே, எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் அம்மா” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரது இழப்புக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here