ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு “மாஸ்டர்” படத்திற்காக வழங்கப்பட உள்ளது.
பலமான கூட்டணி
நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்த வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜய் இருந்து வருகிறார். ஆரம்பத்திலிருந்து இப்போது வரை தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் விஜய், முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் டாப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் இணைய போவதாக அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டுள்ளனர். விஜய், வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிறந்த நடிகர் விருது
இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு “மாஸ்டர்” படத்திற்காக வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான விருது “தலைவி” படத்திற்காக கங்கனா ரனாவத்திற்கும், சிறந்த படம் என்ற பிரிவில் “சார்பட்டா பரம்பரைக்கும்”, இந்த படத்தை இயக்கிய பா. ரஞ்சத்துக்கு சிறந்த இயக்குநர் விருதும், “மாநாடு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டன் ஜெய் பீம் படத்திற்கும், மாநாடு படத்திற்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட உள்ளது. சர்வதேச அளவில் தமிழ் கலைஞர்களுக்கு கிடைக்கப்படும் இந்த பெரிய அங்கீகாரத்தால் தமிழ் சினிமா துறையினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.