பிச்சைக்காரன் 2 ரிலீஸ் ஆன நேற்று ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

பிச்சைக்காரன் தந்த மாற்றம்

நேற்று மாலை 6:30 மணி அளவில் அனைவராலும் ஒரு செய்தி பகிரப்பட்டு வந்தது. அதாவது ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இது செல்லுபடி ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பிச்சைக்காரர் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழிக்க வேண்டும், அப்பொழுது தான் நாட்டில் இருக்கும் வறுமை, லஞ்சம், ஊழல் அனைத்தும் அழியும் என்றும் கூறுவார். இதை செய்தால் நாட்டில் ஒரு பிச்சைக்காரன்கூட இருக்க மாட்டார் என அதை நிகழ்ச்சியில் கூறுவார். அவர் சொன்ன நேரமா என்னமோ தெரியவில்லை, படம் வெளியாகி சில மாதங்களிலேயே ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த மாற்றம் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் நல்ல செய்தி தான். ஆனால் சிறுக சிறுக சேமித்து வைத்த நடுத்தர குடும்பத்திற்கும், ஏழைகளுக்கும் பெரிய இடியாகவே வந்து இறங்கியது. பிச்சைக்காரன் முதல் பாகம் வெளியான உடனே அந்த கான்செப்ட்டை அப்படியே நடைமுறையில் இறக்கினர்.

பிச்சைக்காரன் 2 தந்த மாற்றம்

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் நேற்று பிச்சைக்காரன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது. தற்போது விஜய் ஆண்டனிக்கும், நடந்து கொண்டிருக்கும் மானிடைசேஷனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் ரசிகர்கள் காமெடியான கருத்துக்களை கமெண்ட் மூலம் பதிவிட்டு வருகின்றனர். பிச்சைக்காரன் முதல் பாகம் ரிலீஸ் ஆகப்போகுது ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தனர். தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வெளியான இதே நாளில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெற்றுள்ளது ரசிகர்களின் பேச்சு பொருளாக மாறி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பிச்சைக்காரன் மூன்றாம் பாகம் வெளியானால் என்ன நிலைமையோ என்ற கருத்துக்களையும் பதிவிட்டு கவுண்டர் அடித்து வருகின்றனர். எது எப்படியோ பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான பிச்சைகாரன் 2 படத்திற்கு இதுவே நல்ல ப்ரோமோஷனாகவே மாறிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here