“லிட்டில் மெர்மைட்” படத்தின் ப்ரமோஷன் விளம்பரத்தில் நடிகை ஜான்வி கபூர் கடல் ராணியாக நடித்துள்ளார்.
பிரபலத்தின் மகள்
80களில் கொடி கட்டி பறந்த நடிகை நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுடில் சில படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். அது மட்டுமல்லாமல் அவரது தந்தை தயாரிப்பாளர் போனி கபூர் என்பதால் அவருக்கு நட்சத்திர வாரிசு அந்தஸ்தும் அதிகமாவே உள்ளது. ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி. ஹிந்தியில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். ஜூனியர் என்டிஆர் இன் 30வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகை ஜான்வி கபூர். கொரட்டலா சிவா இயக்கும் என்டிஆர் 30 படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.
கடல் ராணி
இந்நிலையில், வருகிற 26 ஆம் தேதி வெளிவர இருக்கும் ஹாலிவுட் அனிமேஷன் படமான “லிட்டில் மெர்மைட்” படத்தின் ப்ரமோஷன் விளம்பரத்தில் நடிகை ஜான்வி கபூர் கடல் ராணியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கடல் ராணியை பற்றிய கதை என்பதால் குழந்தைகளுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. “லிட்டில் மெர்மைட்” படத்தில் கடல் ராணியாக ஹாலே பெய்லி நடித்துள்ளார். மேலும் ஜோனா ஹவுர்-கிங், டேவிட் டிக்ஸ், அக்வாஃபினா, ஜேக்கப் ட்ரெம்ப்ளே, நோமா டுமேஸ்வேனி, ஜேவியர் பார்டெம், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.















































