கத்ரீனா கைப்பை விவாகரத்து செய்வீர்களா? என கேட்ட கேள்விக்கு நடிகர் விக்கி கவுசல் டென்ஷனாகி பதிலளித்துள்ளார்.

ஜோடியாக ஆட்டம்

பாலிவுடில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்கி கவுஷல், நடிகை கத்ரீனா கைப்பை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நடிகர் விக்கி, தற்போது நடிகை சாரா அலி கானுடன் இணைந்து “ஜாரா ஹட்கே ஜாரா பச்கே” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா முப்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் விக்கி, சாரா அலி கான், தயாரிப்பாளர் தினேஷ் உள்ளிட்ட பலரும் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையில் விக்கியும், சாராவும் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜெர்க்கான விக்கி

ட்ரைலர் வெளியீட்டுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த விக்கியிடம், பத்திரிக்கையாளர் ஒருவர் திருமண வாழ்க்கை பற்றியும் இரண்டாவது திருமணம் குறித்து அவரது எண்ணங்களை பற்றியும் கேட்டார். கத்ரீனா கைப்பை விட சிறந்த நடிகை கிடைத்தால் இரண்டாவது திருமணத்தை தேர்ந்தெடுப்பது சரி என நினைக்கிறீர்களா? என அந்த பத்திரிக்கையாளர் விக்கிடம் கேட்டார். இதனால் அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கேள்வியால் ஷாக் ஆன விக்கி நீங்கள் என்ன கேட்கிறீர்கள். நான் வீட்டுக்கு போக வேண்டும். ஏன் இது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்கிறீர்கள்? இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அடுத்த பிறவிலும் கத்ரினாவை விட்டு போக மாட்டேன். எங்களுடையது உண்மையான காதல் என்று விக்கி கூறினார். இந்த பதிலுக்கு பிறகு தான் அங்கு இருந்த அனைவரும் அமைதி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here