ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்” படத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரத்தியேக புகைப்படம் வெளியாகி உள்ளது.
பிஸி ஷூட்டிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “லால் சலாம்” படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. கபில் தேவ், லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இணைந்த கபில் தேவ்
லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் இப்படத்தின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். “மொய்தீன் பாய்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரஜினியின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சிலர் அந்த போஸ்டரை ட்ரோல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. இருவரும் சந்தித்துக் கொண்ட காரணத்தை ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த கபில் தேவுடன் லால் சலாம் படத்தில் நடிப்பதில் பெருமையும், பாக்கியமும்” என பதிவிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.