நடிகர் ஜெயம் ரவி நடிக்க போகும் அடுத்த படம் பிரமாண்டமாக 100 கோடியில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெகா ஹிட்
தமிழில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் நடிகர் ஜெயம் ரவி. ஏற்கனவே இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது மார்க்கெட் எகிரி உள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜெயம் ரவி நடிப்பில் “இறைவன்” திரைப்படம் உருவாகி உள்ளது. அகமது இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அடுத்தடுத்து படங்கள்
இறைவன் படத்தை தொடர்ந்து தற்போது “சைரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரவி. இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கின்றார். இந்த படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படி தனது கைவசம் பல படங்களை வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி, இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
வலைவீசும் படக்குழு
தற்போது ஜெயம் ரவி கமிட்டாகி இருக்கும் படத்திற்கு ஜீனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இரண்டு ஹீரோயின்களை தேர்ந்தெடுத்துள்ள பட குழு மூன்றாவது ஹீரோயினிக்காக வலை வீசி வருகிறார்கள். கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இதுவரை தேர்வாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். விரைவில் அந்த மூன்றாவது ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.