ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியங்கா அல்காரி சீரியலை விட்டு விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் ஏராளம்

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் டிவியில் இவர் ரோஜா தொடரில் நடிக்கும் பொழுதே பல ரசிகர்களைப் பெற்றார். ரோஜா தொடரில் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது சீதா ராமன் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த தொடர் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலகிய பிரியங்கா?

நடிகை பிரியங்கா நல்காரி தனது நீண்ட நாள் காதலர் ராகுலை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண புகைப்படத்திலும் இவர்கள் இருவர் மட்டுமே இருந்ததால், யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த சர்ச்சைக்கு விளக்கமும் கொடுத்திருந்தார் பிரியங்கா. தற்போது அடிக்கடி தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சீதா ராமன் சீரியலில் இருந்து பிரியங்கா விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமியார் மருமகள் மோதலை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த தொடரில் இருந்து இவர் விலகப்போவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலவும் குழப்பம்

திருமணத்திற்கு முன்பே நிரந்தர வேலைக்காக மலேசியாவுக்கு சென்றுவிட்டார் ராகுல். இதனால் பிரியங்காவும் மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எப்பொழுதெல்லாம் சூட்டிங் இருக்கிறதோ அப்பொழுது மட்டும் சென்னைக்கு வந்து நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பி மலேசியாவுக்கு சென்று விடுகிறார் பிரியங்கா. இதனால் நடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு இருவரும் மலேசியாவில் செட்டில் ஆகப்போவதாக சிலர் கூறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால்கூட நடிப்பதை நிறுத்திவிட முடிவெடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தெளிவான விவரத்தை பிரியங்கா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here