விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் தெலுங்கு டப்பிங் தொடர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ரீமேக் தொடர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் பெரும்பாலான தொடர்கள் மற்ற மொழியில் ஹிட்டான சீரியல்கள் ரீமேக் செய்யப்பட்டும், டப்பிங் செய்யப்பட்டும் ஒளிபரப்பப்படுகின்றது. அதேபோல் தமிழில் ஹிட்டான சீரியல்களும் மற்ற மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நடிகர் வினோத் பாபு, பவித்ரா ஜனனி நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தென்றல் வந்து என்னைத் தொடும்” தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
திடீர் நிறுத்தம்
ஆரம்பத்தில் ரொமான்டிக்காக இருந்த இந்த சீரியல், தற்போது ஹீரோ – ஹீரோயின் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது போல் கதை நகர்கிறது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. இருந்தாலும் தமிழ் சீரியல் அளவிற்கு தெலுங்கில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதாலும், குறைந்த டிஆர்பி கிடைப்பதாலும் இந்த தொடரை திடீரென நிறுத்தியுள்ளனர். இதனால் தெலுங்கு ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உள்ளனர். அதேபோல் இன்னொரு தெலுங்கு சீரியலும் நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் தமிழிலிருந்து டப் செய்யப்பட்ட தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.