நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 
வரிசையாக படங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்து, வசூலை வாரி குவித்தது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் தமிழில் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தின் வெற்றிக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் காதல்?
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்கி வருகிறார். முதலில் இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. அதனையடுத்து அவர் தனது நீண்ட கால நண்பரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் சிலர், இவர்தான் கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் நண்பர். இவர் ஒரு தொழிலதிபர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















































