10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வினை, சுமார் 9,96,089 மாணவ – மாணவிகள் எழுதினர். அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன. இதனிடையே 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என கேள்வி எழுந்திருந்தது.
ரிசல்ட் தேதி
இந்நிலையில் 10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அதே தினம் பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் சமர்பித்த செல்போன் எண்ணிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.