இப்பொழுதும் பொலிவுடன் இருக்கும் நடிகை திரிஷாவை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.
அதே அழகு
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். 40 வயதிலும் குறையாத இளமையுடன், இளம் ஹீரோயின்களே டஃப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார் திரிஷா. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமா நட்சத்திரங்களையே பொறாமை பட வைத்தது. அந்த அளவிற்கு நீங்காத இளமையுடன் சவுத் இந்தியன் குயினாக வலம் வருகிறார் திரிஷா.
திரிஷாவை பிடிக்கும்
இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரிஷாவை பற்றி பேசியுள்ளார். தற்போது தெலுங்கில் பிஸியாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, நாக சைதன்யா நடிப்பில் வெளியான “கஸ்டடி” திரைப்படத்தில் நடித்திருந்தார். 19 வயதான நடிகை கீர்த்தி ஷெட்டி இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட கேள்விக்கு, “எனக்கு பல நடிகைகள் பிடிக்கும். ஆனால் இப்போது திரிஷா மேடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். அவர் மிகவும் பொலிவுடன் இருக்கிறார். அவரை பார்ப்பதற்கு என்னை விட வயது இளையவராக தெரிகிறார்” என்று கூறியுள்ளார்.