நடிகர் விஜயின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து அவரது அம்மா ஷோபா விளக்கமாக கூறியுள்ளார்.

பலரின் இன்ஸ்பிரேஷன்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் விஜயின் பெயரை சொன்னவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய பிட்னஸ் தான். 80களில் நடிக்க துவங்கிய விஜய் இன்று வரை தனது பிட்னஸ்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக இருந்து வரும் நடிகர் விஜய், பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகவே இருக்கிறார். உலக அளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் விஜயின் பிட்னஸ் சீக்ரெட் பற்றி அவரது அம்மா ஷோபா கூறியுள்ளார்.

பிட்னஸ் சீக்ரெட்

விஜயின் பிட்னஸ் சீக்ரெட் பற்றி அவரது அம்மா ஷோபா இருப்பதாவது; “விஜயின் பிட்னஸ்க்கு காரணம் தோசை தான். விஜய்க்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும். காலையில் இரண்டு தோசை, இரவில் இரண்டு தோசை எடுத்துக்கொண்டு முறையான உடற்பயிற்சி செய்வதால் தான் விஜய் இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கிறார்” என்று ஷோபா கூறியுள்ளார். தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here