பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் உஸ்தாத் பகத் சிங் படத்தின் போஸ்டரை பார்த்த நடிகை பூனம் கவுர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடும் விமர்சனம்
பிரபல நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டுகளை அடிக்கடி படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றனர். 10 வருடங்களுக்குப் பிறகு ஹரிஷ் சங்கர் மற்றும் பவன் கல்யாண் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருகிறது. உஸ்தாத் பகத் சிங் படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனைப் பார்த்த நடிகை பூனம் கவுர் கடுமையாக விமர்சனம் செய்து கேள்வி எழுப்பி உள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய நடிகை
பவன் கல்யாணின் கால்களை காட்டும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு பூனம் கவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பரபரப்பான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “பவன் கல்யாண் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பட்டம் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கை அவமதிக்கும் செயல். அது மட்டும் இல்லாமல் ஒரு போராட்ட வீரரின் பெயரை உங்கள் காலடியில் வைப்பதில் என்ன பயன்? அவமானப் படுத்துகிறீர்களா? இது அவமானமான செயல். இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சர்ச்சைக்கு படக்குழு இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்த சர்ச்சையினால் டுவிட்டுக்கு பதிலடி கொடுப்பார்களா? அல்லது போஸ்டரை மாற்றுவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.















































