லியோ படத்தில் அர்ஜுன் வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

மாஸ் கூட்டணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

அர்ஜுன் காட்சிகள் முடிந்தது

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. டிசம்பர் மாதம் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு ஜனவரி முதல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மே மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் விஜய் மற்றும் அர்ஜுன் இருவரின் காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அடுத்த கட்டமாக விஜயுடன் மன்சூர் அலிகான் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக உள்ளதாக கூறுகின்றனர். கிட்டத்தட்ட 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் மீதி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here