சமீபத்தில் உடல் எடை அதிகமாகியுள்ள நடிகர் சூர்யாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
நிலவும் எதிர்பார்ப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
OTT உரிமம்
கங்குவா படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், யு வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 3d தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைதிருக்கும் இந்த படம், 10 மொழிகளில் உருவாகி வருகிறது. அமேசான் OTT நிறுவனம் கங்குவா படத்தை ரூ.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி கொடுத்து உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கொடைக்கானலில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா பிரியாணி விருந்து வைத்தும் அசத்தியுள்ளார். இதை அடுத்து சில நாட்கள் இடைவேளையில் அடுத்தகட்ட சூட்டிங் துவங்க உள்ளதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

உடல் எடை கூடிய சூர்யா
இந்நிலையில், கங்குவா படத்தின் ஃப்ளாஷ்பாக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய உடல் எடையை அதிகரித்துள்ளார். சூர்யா – ஜோதிகா மற்றும் படக்குழுவினர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றுவதும், இறக்குவதும் எப்பொழுதுமே செய்து வருபவர் சூர்யா. தனது படங்களுக்காக அதிகம் மெனக்கெட்டு வரும் நடிகர் சூர்யா, இந்த படத்தில் உடல் எடையை அதிகமாக ஏற்றி இருப்பது ரசிகர்களை பிரம்மிப்படைய செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.















































