தமிழும் சரஸ்வதியும் தொடரில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தர்ஷனா புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விலகிய தர்ஷனா
விஜய் டிவியில் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை சம்பாதித்துள்ள விஜே தர்ஷனா, தற்போது புதிய தொடரில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய விஜே தர்ஷனா, சித்தி 2 தொடரில் ராதிகாவின் மகளாக நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் விஜய் டிவியில் பிரபலமான தமிழும் சரஸ்வதியும் தொடரில் முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வசுந்தரா என்ற கேரக்டரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தர்ஷனா, சமீபத்தில் இந்த தொடரை விட்டு விலகினார்.
ஹீரோயினாக வசு
விஜய் டிவியில் பிரபலமான தொடராக இருக்கக்கூடிய தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து எதனால் இவர் விலகினார் என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த புதிய தொடரில் விஜே தர்ஷனா நடிக்க உள்ளார். இந்த சீரியல் குறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.