சின்னத்திரை நடிகை ரக்ஷிதா இயக்குநருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது.
சின்னத்திரை பிரபலம்
விஜய் டிவியில் பிரபலமான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் ரட்சிதா மகாலட்சுமி. சன் டிவியில் இளவரசி தொடரிலும் நடித்திருந்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். கவினுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் சீசனிலும் நடித்திருந்தார். இத்தொடரில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ரட்சிதா நடித்திருந்தார். அதன்பிறகு ஜீ தமிழில் நாச்சியார்புரம், விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.
காதல் வதந்தி
நடிகை ரட்சிதா 2013 ஆம் ஆண்டு தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் பிரிவம் சந்திப்போம், புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார். திருமணம் செய்து கொண்ட பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சட்டப்படி இன்னும் இவர்கள் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் நடிகை ரக்ஷிதா சின்னத்திரை இயக்குநரை கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து இதுவரை எந்த தகவலும் யாரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















































