இன்று 52வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித்குமாருக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
பிறந்தநாள் கொண்டாட்டம்
சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் இன்று பல மடங்கு முன்னேறி முன்னணி ஹீரோவாக பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் நடிகர் அஜித்தை ரசிகர்கள் கொண்டாட பல காரணங்கள் உள்ளது. சினிமாவில் அவரது நடிப்பை தாண்டி அவரது குணமும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. 1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித்குமார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அஜித்குமார், அப்போதிலிருந்து முன்னணி நடிகராகவே வலம் வரத் தொடங்கினார்.
மாஸ் ஹீரோ
நடிப்பை எல்லாம் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என அனைத்திலும் ஹீரோவாகவே இருந்து வருகிறார் அஜித்குமார். அமராவதி படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான காதல் மன்னன், அவள் வருவாளா, அமர்க்களம், முகவரி, வாலி, தீனா, ரெட், பில்லா, மங்காத்தா என அனைத்தும் அதிரடி ஹிட் ஆகி போனது. அஜித்தின் கேரியரில் பல தோல்வி படங்கள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி இன்றும் ஒரு முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நீங்க அதை இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் ரசிகர்களால் புகழப்படுபவர். இவரது விடாமுயற்சியை ரசிகர்களும் பின்பற்றி அவரை பாலோ செய்து, அவரது பெயரில் பல சமூக தொண்டுகளையும் செய்து வருகின்றனர். இன்று 52வது பிறந்தநாள் கொண்டாடும் அஜித்துக்கு அவர் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.















































