நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது.
தொடர் தோல்வி
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழியிலும் தொடர்ந்து ஆறு தோல்வி படங்களை கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான பூஜா, அதன்பின் பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில வெற்றி படங்களை கொடுத்திருந்த நடிகை பூஜாவுக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த “அல வைகுந்தபுரமுலு” திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இதுவே கடைசி வெற்றி படமாகவும் அமைந்துவிட்டது.
பெரும் கேள்வி
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான “மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுல, ராதே ஷியாம், பீஸ்ட், ஆச்சார்யா, சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் இணைந்து நடித்த “கிசிகி பாய் கிசிகி ஜான்” என தொடர்ந்து ஆறு தோல்வி படங்களை கொடுத்துள்ளார் நடிகை பூஜா. இதனால் மீண்டும் முயற்சித்து தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்வாரா? என்ற பெரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலே இயக்குநர்கள் அந்த கதாநாயகிகளை ஓரங்கட்டி விடுவது சாதாரணமான விஷயமாக உள்ளது. அதனால் அடுத்தடுத்து இவர் படங்களின் நடிப்பாரா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே மாறிவிட்டது.
துவண்ட பூஜா
பூஜாவின் தோல்விக்கு காரணம், இவர் தேர்வு செய்யும் கதைகள் எதுவும் சரி இல்லை என்றும், இவரது நடிப்பு கூட ரசிகர்களை கவரும் வகையில் இல்லை என்றும் கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. ஆனால் சமீபத்தில் பூஜா ஹெக்டே அளித்த பேட்டியில், தனது நடிப்பு தனக்கு திருப்திகரமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் தற்போது தனக்கு கிடைத்த தோல்வி படங்கள் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார். தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருவதால் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் பூஜா ஹெக்டே கூறி இருப்பதாவது, “நான் ஒன்றும் பெரிய சினிமா பின்னணியில் இருந்த நடிக்க வரவில்லை. நான் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து தான் நடிக்க வந்துள்ளேன். அதனால் என்னை தேடி வரும் கதைகளை மட்டுமே நான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இனிவரும் படங்களிலாவது கதைகளை சரியாக தேர்வு செய்து நடித்தால் பூஜா ஹெக்டை தப்பித்துக் கொள்ளலாம், இல்லை என்றால் கஷ்டம்தான் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.