இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
பல படங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்து, வசூலை வாரி குவித்தது. தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் தமிழில் மாமன்னன் திரைப்படம் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது திருமணம் குறித்து தகவலை வெளியிட்டுள்ளார்.
திருமணம் இல்லை
சமீபகாலமாகவே கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தகவல்கள் கசிந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு நடிகரை காதலிப்பதாகவும் கூறி வந்தனர். ஆனால் இதையெல்லாம் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மறுத்தனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பது போல வடிவேலு பாணியில் கார்ட்டூன் பொம்மையை பதிவிட்டுள்ளார்.