சினிமாவில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
பீஸ்ட் நாயகி
2012 ஆம் ஆண்டு முகமூடி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கிய இந்த படத்தில் ஜீவா, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தில் விஜய், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன் பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, தற்போது மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கஷ்டப்பட்டேன்
சல்மான்கான் ஜோடியாக ‘கிசிகா பாய் கிசிகா ஜான்’ என்ற படத்திலும் நடித்தார் பூஜா . ஆனால் அந்த படமும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்வதாகவும், இருவரும் அடிக்கடி வெளியே செல்வதாகவும் சமீபகாலமாக வதந்திகளும் வெளியானது. அதனை மறுத்திருந்தார் பூஜா. இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ளார், அவர் கூறியிருப்பதாவது,” சினிமாவில் நடிக்க வந்தவுடனேயே வெற்றி கிடைத்து விடவில்லை. திரையுலகில் எனது 11 வருட பயணம் என்பது, ரோலர் கோஸ்டர் ரெய்டு போல் ரொம்ப ரிஸ்க்கானது. முதலில் தமிழிலும், தெலுங்கிலும் நடித்தேன். அப்போது எனக்கு மாநில மொழிகள் தெரியாது என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் மிகவும் கஷ்டப்பட்டேன். இதுவரை பல கஷ்டங்களைச் சந்தித்து, அதன் சாதக, பாதகங்களையும் ஏற்றுக்கொண்டு துணிச்சலாக முன்னேறி வருகிறேன். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
மனஅழுத்ததில் இருந்தேன்.
இதனால், புதுப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். அப்போது எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து இப்போது ஏனோ வெளியே சொல்ல முடியவில்லை. இந்நிலையில், திடீரென்று எனக்கு புதுப்பட வாய்ப்பு குவிந்தது. மீண்டும் நான் நடிப்பில் பிசியாகி விட்டேன். எனது குடும்பத்தினர் யாரும் சினிமாவில் கிடையாது. இப்போது சினிமாவை என் குடும்பமாக ஏற்றுக் கொண்டேன். சினிமாவில் நான் சந்தித்த சில அனுபவங்கள், யாருக்காவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட உத்வேகத்தை அளிக் கும் என்றால், அதுவே எனக்கு கிடைத்த வெற்றிஎனலாம். சினிமாவில் மட்டுமல்ல, வேறெந்த துறையை எடுத்துக்கொண்டாலும், கஷ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது என்பதே நிஜம்.