நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இரண்டு லெஜெண்ட்ஸ்

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சூர்யா, சச்சினை நேரில் சந்தித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சூர்யாவுடனான சச்சினின் சந்திப்பு குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், சமீபத்தில் இதுகுறித்து மனம் திறந்து பேசி உள்ளார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல பேருக்கு முன்னோடியாக இருக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர், அடிக்கடி ரசிகர்களிடம் சோசியல் மீடியாக்களில் சாட்டிங் செய்வார்.

கூச்சமாக இருந்தது

சமீபத்தில் நடந்த சோசியல் மீடியா சாட்டிங் போது சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி, இந்த சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு சச்சின் பதிலளித்து கூறுகையில், “நாங்கள் இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். மேலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய வேண்டாமே என்று விரும்பினோம். ஆனால் போகப் போக அது ஒரு நல்ல உரையாடலாக மாறிய தருணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் கூறிய இந்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here