வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான “கிசி கா பாய் கிசி கி ஜான்” படம் படு தோல்வியடைத்துள்ளது.
வீரம் ரீமேக்
2014 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இவர்களுடன் விதார்த், பாலா, சந்தானம், நாசர் உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரூ.45 கோடியில் உருவான இந்த திரைப்படம், சுமார் ரூ. 130 கோடி வரை வசூலை குவித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதனை தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தனர். மேலும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சொதப்பிய சல்மான்
ஹிந்தியில் இந்த திரைப்படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வெங்கடேஷ் டகுபதி, ஜெகபதி பாபு, ஷெஹ்னாஸ் கில், ராகவ் ஜூயல், பாலக் திவாரி, வினாலி பட்நாகர், ஜாஸ்ஸி கில், சித்தார்த் நிகம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம். கலவையான விமர்சனங்களை பெற்றதுடன் பல சீன்களும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகை பூஜா ஹெக்டேக்கு இந்த படமாவது கை கொடுக்குமா என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த படமும் சொதப்பியுள்ளது. சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்ஸ் இப்படத்தை கிழித்து தூங்கவிட்டு வருகின்றனர்.















































