ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் PS 2 குழுவினர் ,டெல்லி மற்றும் கொச்சியில் இன்று ப்ரோமோஷன் செய்தனர்.
தனி விமானம் வேண்டும்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷனில் அப்படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பல ஊர்களுக்கு டூர் அடித்துள்ளஇவர்கள் தற்போது கொச்சி மற்றும் டெல்லியில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். ப்ரோமோஷனுக்கு தனி விமானம் வேண்டும் என்றும் அப்பொழுதுதான் பிரமோஷனில் ஈடுபடுவேன் என்று விக்ரம் கூறியதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. இது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நந்தினி பங்கேற்க வில்லை
PS 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும் இப்படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்கவில்லை. ஐஸ்வர்யா ராயின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் இருப்பதாகவும் சில யூடியூப் சேனல்கள் வதந்தி ஒன்றை பரப்பி வந்தனர். சிறு வயதிலிருந்து ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகளை அவர் பக்கத்திலேயே வைத்திருப்பார். இதை பார்த்த சிலர் ஆராத்யாவுக்கு அரிய வகை நோய் இருப்பதாக அவதூறான விஷயங்களை பரப்பி வந்தனர். இதனை தண்டிக்கும் விதமாக 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார் ஐஸ்வர்யா ராயின் மகள். அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் அல்லது அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என ஆராதியா பச்சன் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. இதனாலையே பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனுக்கு ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை என்றும் கூறுகின்றனர். ஐஸ்வர்யா ராய் தவிர மற்ற முன்னணி நடிகர்கள் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஸ் கிரீம் வேட்டை
சென்னையில் துவங்கிய இவர்களது ப்ரோமோஷன், கோவை, டெல்லி, கொச்சியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகமான வெயிலை தாங்க முடியாத படக் குழுவினர் நடுரோட்டில் நின்று ஐஸ்கிரீம்களை வெளுத்து வாங்குகின்றனர். இவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.