நடிகை அதிதி ஷங்கர் புது படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நல்ல வரவேற்பு

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மகளான ஆதிதி ஷங்கர். மருத்துவரான இவர், விருமன் படத்திற்கு பிறகு தற்போது பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். விருமன் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக அறிமுகம்

மாவீரன் படத்திற்கு பிறகு அடுத்து எந்த படத்தில் யாருடன் ஜோடி சேரப் போகிறார் அதிதி என்று பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக அதிதி நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாக போவதாகவும் கூறுகின்றனர். மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கப்போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here