தை புத்தாண்டை முன்னனிட்டு நடிகை ரட்சிதா மகாலட்சுமி ரூ.22 லட்சத்துக்கு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

டிவி பிரபலம்

விஜய் டிவியில் பிரபலமான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் ரட்சிதா மகாலட்சுமி. சன் டிவியில் இளவரசி தொடரிலும் நடித்திருந்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். கவினுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் சீசனிலும் நடித்திருந்தார். இத்தொடரில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜீ தமிழில் நாச்சியார்புரம், விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட பல தொடர்களில் ரட்சிதா நடித்துள்ளார்.

புத்தாண்டு வரவு

2013 ஆம் ஆண்டு தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரட்சிதா. இவரும் பிரிவம் சந்திப்போம், புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தனர். இவர்கள் திருமணதிற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புது கார் ஒன்றை வாங்கி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரட்சிதா. கிட்டத்தட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை அவர் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here