தனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருப்பதாக கூறியுள்ள நடிகை ஷிவானி அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

முட்டி மோதும் ஷிவானி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்ற தொடரின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன்பிறகு சில சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடரிலும் நடித்திருந்தார். அதன்பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கண்டஸ்டன்ட்டாக பங்கேற்று 98வது நாளில் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் சில சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்த நடிகை ஷிவானி நாராயணனுக்கு, டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவரது நடிப்பில் ‘பம்பர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை எம்.செல்வகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் கேரளா லாட்டரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. சோசியல் மீடியா பிரபலமான ஜி.பி. முத்துவும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

வாய்ப்புகள் இல்லை

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஷிவானி நாராயணன், அடிக்கடி தனது கவர்ச்சியான ரீலிஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார். சின்னத்திரையில் தனக்கு ஈசியாக வாய்ப்புகள் கிடைத்துவிட்டதாகவும், ஆனால் சினிமாவில் அவ்வளவு எளிதாக தனக்கு நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் எந்தவித பேக்கிரவுண்ட் இல்லாததால் எனக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக உள்ளது என்றும் நடிகை ஷிவானி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here