தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தனது திரைப்பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் கவனம்

2012 ஆம் ஆண்டு முகமூடி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கிய இந்த படத்தில் ஜீவா, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தில் விஜய், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சல்மான்கானுக்கு ஜோடியாக ‘கிசிகா பாய் கிசிகா ஜான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தீர்மானிக்க முடியாது

இந்த நிலையில், பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், “எல்லா படங்களிலுமே கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனால் அவற்றின் வெற்றி தோல்வியை நம்மால் தீர்மானிக்க முடியாது. வெற்றி தோல்வி என்பது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இது எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. எனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடிக்க முயற்சி செய்கிறேன். என்னால்கூட பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி காட்சி அளிக்க முடியும். அதேபோல மாடர்ன் பெண்ணாகவும் நடிக்க முடியும். சரித்திர காலத்து நடிகையாகவும் நடிப்பேன். எனக்கு தெய்வ பக்தி அதிகமாக இல்லை. ஆனால் நம்மையெல்லாம் ஏதோ ஒரு பலமான சக்தி முன்னோக்கி நடத்துகிறது என்று மட்டும் நம்புவேன்” என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here