சாகுந்தலம் படத்தில் நடித்த போது நடந்த அனுபவங்களை நடிகை சமந்தா தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

உடல் முழுக்க தழும்பு

நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சகுந்தலை என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார். நாளை வெளியாக இருக்கும் இந்த படத்தின் பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா, இதற்காக பல இன்டர்வியூக்களை கொடுத்து, படப்பிடிப்பில் நடந்த அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

முயல் கடி

இதுதொடர்பாக சமந்தா கூறுகையில்: “எனக்கு மலர்கள் என்றாலே அலர்ஜி. ஆனால் சாகுந்தலம் படத்தில் நடித்தபோது பலமுறை கையை சுற்றியும், கழுத்தை சுற்றியும் மலர் மாலைகளை போட்டுக்கொண்டதால் உடல் முழுவதும் எனக்கு தழும்புகள் வந்துவிட்டன. முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது நாள் டாட்டூ மாதிரி உடம்பில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஆறு மாதங்கள் அவை அப்படியே மச்சங்கள் போல் இருந்தன. சாகுந்தலம் படத்துக்காக சுயமாக டப்பிங் பேசினேன். அது கஷ்டமான வேலையாக இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரிஜினல் வாய்ஸ் தேவைப்பட்டது. செட்டில் நிறைய முயல்கள் இருக்கும். அவற்றில் ஒன்று படப்பிடிப்பின்போது என்னை கடித்துவிட்டது. அதற்கு முன்புவரை எனக்கு மிகவும் பிடித்திருந்த முயல்கள் கடித்ததிலிருந்து பிடிக்காமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here