சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரவு
சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென மாநகராட்சிக்கு கூறியிருந்தது.
போராட்டம்
இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கடைகளை அகற்றும் பணியில் மாநகரட்சி நிர்வாகம் ஈடுபட்டது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், சாலையில் மீன்கள் மற்றும் நண்டுகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினருடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.