நடிகை அனுஷ்கா மலையாளத்தில் நடிக்கப்போகும் புது படமானது 7 மொழிகளில் வெளியாக போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
வெற்றிக்கு போராட்டம்
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை அனுஷ்கா அனைத்து மொழியிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தற்போது மூன்று வருட இடைவேளைக்கு பிறகு, மிஸ் செட்டி மிசஸ் பாலிசெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்நிலையில் மலையாள படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அனுஷ்கா தான் சரி
ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயசூர்யா நடித்த மங்கி பென், ஹோம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா மலையாளத்தில் அறிமுகமாக போகிறார். கிட்டத்தட்ட ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம், ஏழு மொழிகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா நடித்தால் சரியாக இருக்கும் என்பதால் அனுஷ்காவுடன் இதுகுறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.