நடிகர் விஜய் சேதியும் அவரது குட்டி ஃபேனும் பேசும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

சினிமா ஆர்வம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமா பிரபலங்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் இருக்கின்றது. சினிமா பிரபலங்களை எங்கே நேரில் பார்த்தாலும் செல்பி எடுத்துக் கொள்வது, அவர்களுடன் பேச முயல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றது. இதேபோல்தான் நேற்று விக்னேஷ் சிவன் நயன்தாரா குலதெய்வ கோயிலுக்கு சென்ற பொழுது ரசிகர்கள் பலர் ஒன்று கூடி செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதேபோல் சமீபத்தில் ஒரு குழந்தை விஜய்யை பார்க்க வேண்டும் என்று தன் அம்மாவிடம் அடம் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியநிலையில், நடிகர் விஜயும் அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசினார். அதேபோல் இன்னொரு சூப்பரான சம்பவம் நடந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி ஒரு குழந்தையிடம் பேசி உரையாடுவதும், அந்த குழந்தை விஜய் சேதுபதியை முத்தமிடுவதும் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவுகிறது.

அன்பு முத்தம்

விஜய் சேதுபதியை நேரில் காண வேண்டும் என்று கூறியிருந்த அந்த குழந்தையிடம் விஜய் சேதுபதி உரையாடுகிறார். “இங்கே எதுக்கு வந்தீங்க என்று விஜய் சேதுபதி அந்த குழந்தையிடம் கேட்க, உங்களைப் பார்க்கணும் போல தோணுச்சு அதான் வந்தேன் என்று அந்த குழந்தை மழலையுடன் பேசுகிறது. உன் கூட யாராவது இருக்காங்களா என விஜய் சேதுபதி கேட்க, ஆயம்மா இருக்காங்க என சொன்னதுடன், எனக்கு மூணு வயசு ஆகுது ஆயம்மாவுக்கு இரண்டு வயசு ஆகுது என்று அந்த குழந்தை கூறியவுடன் அங்க இருக்கும் அனைவரும் சிரித்து விடுகின்றனர். சாக்லேட் பிடிக்குமா என்ற விஜய் சேதுபதி கேட்கிறார். ஒரு டப்பாவில் இருந்த சாக்லேட்களை எடுத்து கொடுத்தவுடன் கிளம்பும் அந்த குழந்தையை, தம்பி பாய் சொல்லிட்டு போ, முத்தம் கொடுத்துட்டு போ என விஜய் சேதுபதி கூப்பிடுகிறார். அந்த குழந்தை உடனே ஓடி வந்து விஜய் சேதுபதியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது. இந்த க்யூட்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here