“ரஜினியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்” என்ற தனது ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ரேணுகா.

40 ஆண்டுகள்

1985 ஆம் ஆண்டு ‘பொருத்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேணுகா. “என் தங்கை கல்யாணி”, “சம்சார சங்கீதம்”, “தங்கைக்கு ஒரு தாலாட்டு” என்று இவரது ஆரம்ப கட்டத்தில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் படங்களாக அமைந்ததால், இவருக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு வரிசையாக வந்தது. தேவர் மகன், திருடா திருடா, மகளிர் மட்டும், அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர் ரேணுகா. கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகியது. வெள்ளித் துறையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் அசத்தியவர் நடிகை ரேணுகா. கடந்த ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான “பேப்பர் ராக்கெட்” என்ற வெப் தொடரிலும் நடித்து அசத்தி இருந்தார். இந்த வெப் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

நம்பிக்கை

கமலஹாசன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை ரேணுகா, இதுவரை ரஜினியுடன் நடிக்க வில்லை. இதுகுறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசிய ரேணுகா. “நான் தொடர்களில் நடிக்கும் பொழுது அதை பார்த்து ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். அற்புதமாக நடித்துள்ளீர்கள் எனக்கூறி பாராட்டவும் செய்தார். அப்போதில் இருந்து எனக்கு ரஜினிகாந்துடன் பணியாற்ற வேண்டும் என்று மிகவும் ஆசை. சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகியும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பது எனக்கு வருத்தம்தான். சூர்யாவுக்கு அம்மாவாக நடித்துவிட்டேன், ஆனால் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்கவில்லை. ஒரு முறையாவது ரஜினி படத்தில் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த வாய்ப்பு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here